மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பரிசீலனையில் இருந்த 340 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பசிர்ஹாட் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள பேகம்பூர் பிபிபூர் கிராமப் பஞ்சாயத்தில் மொத்தம் 992 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இறப்பு அல்லது இடமாற்றம் காரணமாக 38 பெயர்கள் வழக்கமான முறையில் நீக்கப்பட்ட நிலையில், மொத்தம் 358 வாக்காளர்கள் தங்களின் தகுதி குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். இதில், 340 பேர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில், ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன. இந்த நிலையில், மாநிலத்தின் வாக்குச்சாவடியின் பரிசீலனையில் இருந்த 340 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே பட்டியலில் வங்காள வாக்குச்சாவடி மேலாளரும் (BLO) இடம்பெற்றிருப்பது மேலும் விமர்சனத்தைத் தூண்டியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட துணைப் பட்டியலில், மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரே வாக்குச்சாவடியைச் சேர்ந்த 340 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில், வாக்குச்சாவடி மேலாளரும் (BLO) இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது. பசிர்ஹாட் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள பேகம்பூர் பிபிபூர் கிராமப் பஞ்சாயத்தில் மொத்தம் 992 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இறப்பு அல்லது இடமாற்றம் காரணமாக 38 பெயர்கள் வழக்கமான முறையில் நீக்கப்பட்ட நிலையில், மொத்தம் 358 வாக்காளர்கள் தங்களின் தகுதி குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். முன்னதாக, இவர்களது பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், துணைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அவர்களில் 340 பெயர்கள் நீக்கப்பட்டன. பெயர் நீக்கப்பட்ட குடும்பத்தினர்கள் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் சமூகத்தின் அடிப்படையில் குறிவைத்து புறக்கணிக்கப்படுவதாக அவரகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தேர்தல் அதிகாரிகளிடம் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறப்படுவதால், பாதிக்கப்பட்ட மக்களும் உள்ளூர் அதிகாரிகளும் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் சட்ட உதவியை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
