
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இலங்கை மகளிர் அணி.
Summary
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய மகளிர் அணி
4 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி 2 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் தோல்வியே காணாமல் வலுவான நிலையில் நீடிக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லாமல் பரிதாப நிலையில் உள்ளது.
இலங்கையை பழிதீர்த்த மழை..
2025 மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் இலங்கை மற்றும் இந்தியாவில் நடந்துவரும் நிலையில், இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி தோல்வியை தழுவியது.
அதேநேரத்தில் அவர்களுடைய சொந்த மண்ணில் கொழும்புவில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி மழையின் காரணமாக டாஸ் போடப்படமாலே ரத்துசெய்யப்பட்டது.

இலங்கை போட்டியில் மழை
அதேபோல நேற்று கொழும்புவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்கள் சேர்த்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்திவிடலாம் என காத்திருந்த இலங்கை வீரர்களுக்கு மீண்டும் மழை குறுக்கிட்டு பாதகத்தை ஏற்படுத்தியது. நீண்டநேரம் போட்டி நடைபெறும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மழையானது ஏமாற்றத்தையே பரிசளித்தது.

இலங்கை நியூசிலாந்து
கடைசியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியும் ரத்துசெய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணி ஒரு வெற்றிகூட இல்லாமல் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி 3 தோல்விகளுடன் இறுதி இடத்தில் நீடிக்கிறது.