
இப்போது கார்களுக்கான ஜிஎஸ்டி குறைந்துள்ள நிலையில், மக்கள் பலரும் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதை நாம் பார்க்கலாம். பல ஷோரூம்களில் ஏகப்பட்ட கார்கள் டெலிவரி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே பணக்காரர்கள் எப்போதும் புதிய காரை வாங்க மாட்டார்கள் எனச் சொன்ன ஆனந்த் சீனிவாசன், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
இந்தக் காலத்தில் கார்கள் என்பது மிடில் கிளாஸ் மக்களுக்கும் கூட கிட்டத்தட்ட அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டும் என்றால் கார் தேவை என்றே பலரும் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே பொதுமக்கள் கார்களை வாங்குகிறார்கள். அதிலும் சமீபத்தில் தான் ஜிஎஸ்டி கூட குறைக்கப்பட்டதால் மக்கள் இன்னுமே ஆர்வமாக கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர்.
குறைந்த கார் விலை
அதாவது ஜிஎஸ்டி குறைப்பால் கார் விலை கணிசமாகவே குறைந்துள்ளது. இதனால் கார்களை வாங்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தவர்கள் கூட இப்போது ஆர்வமாக கார்களை வாங்குகிறார்கள். நம்ம ஊரில் இருக்கும் ஷோரூம்களை பார்த்தாலே மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது நமக்கு புரியும். இதற்கிடையே கார்கள் தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “கார் இன்சூரன்ஸ் வாங்கும்போது நாம் தெளிவாகப் படித்துப் பார்த்து வாங்க வேண்டும். அதில் பம்பர் டூ பம்பர் என்று ஒரு இன்சூரன்ஸ் இருக்கிறது. வாகனம் வாங்கி முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த பம்பர் டூ பம்பர் நமக்குக் கிடைக்கும். இதை எடுத்தால் காருக்கு என்ன ஆனாலும் இன்சூரன்ஸ் கம்பெனி பணத்தைக் கொடுத்துவிடும். அது இருந்தால் பிரச்சினை இருக்காது. ப்ரீமியம் தொகை அதிகம் தான். ஆனாலும், அதன் பிறகு பிரச்சினை இருக்காது.
அதிலும் பெரிய கம்பெனியில் நாம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். சின்ன கம்பெனியில் எடுத்தால் சிக்கல் வரலாம். ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் எப்போதும் குறைவான ப்ரீமியம் இருக்கும் இன்சூரன்ஸை தான் எடுக்கப் பார்ப்பார்கள். ஆனால், அப்படி எடுத்தால் பின்னாட்களில் சர்வீஸ் கிடைக்காது. இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இன்சூரன்ஸில் ஐடிவி (Insured Declared Value) என்று ஒரு விஷயம் இருக்கிறது. கார் வேல்யூவை கம்மியாக சொல்லிவிட்டு, பம்பர் டூ பம்பர் போட்டாலும் யூஸ் இல்லை.
கார் இன்சூரன்ஸ்
ஒரு காரின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% மட்டுமே குறையும் வகையில் இன்சூரன்ஸ் போட வேண்டும். ரூ.20 லட்சம் காருக்கு.. அடுத்த வருடம் ரூ.18 லட்சம்.. அதற்கு அடுத்த வருடம் ரூ.15 லட்சம் என இன்சூரன்ஸ் போட வேண்டும். கார் வாங்கிய அடுத்தாண்டே ரூ.10 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் போட்டால் பயன் இருக்காது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பம்பர் டூ பம்பர்.. பெரிய கம்பெனியில் போட்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும்” என்றார்.
பணக்காரர்கள்
தொடர்ந்து புதிய கார்களை வாங்குவது குறித்துப் பேசிய அவர், “ரியல் பணக்காரர்கள் எப்போதும் புதிய கார்களை வாங்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் செகண்ட் ஹேண்ட் காரை தான் வாங்குவார்கள். பொறுத்திருந்து வாங்கினால் செகண்ட் ஹேண்ட்டில் நல்ல கார் கிடைக்கும்” என்றார்.
அதாவது கார் என்பது ஒரு முதலீடு இல்லை. அது ஒரு செலவு. அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதனால் தான் பணக்காரர்கள் கார்களை புதிதாக வாங்க மாட்டார்கள். செகண்ட் ஹேண்டிலேயே பல நல்ல கார்கள் வரும். ஒரு சரியான மெக்கானிக்கை வைத்துக் கொண்டால் போதும்.. தரமான காரை குறைந்த விலைக்கு வாங்க முடியும். ஆனால், செகண்ட் ஹேண்டில் வாங்கும்போது உடனே வாங்க முடியாது. நல்ல கார் வரும் வரை காத்திருந்தே வாங்க