
உங்களுடைய உடல் கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை எப்படி கையாளுகிறது என்பதன் அடிப்படையிலேயே உடல் எடையானது அமைகிறது. 10 கிலோ கிராம் உடல் எடை குறைகிறது எனும்போது LDL கொலஸ்ட்ராலில் தோராயமாக 9 முதல் 10 mg/dL குறைகிறது என்று அர்த்தம்.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கும் பல நோயாளிகள் மரபணுக்கள் காரணமாக தான் தங்களுக்கு இது ஏற்படுகிறது என்று பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இதய சிகிச்சை வல்லுனரான டாக்டர் ஷைலேஷ் சிங் அவர்கள் இது சம்பந்தமான ஒரு விளக்கத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறுவதாக, “உங்களுடைய கொலஸ்ட்ரால் மரபணுக்கள் காரணமாக அதிகமாவது கிடையாது. இதற்கு காரணம் நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு, உடலுக்கு போதுமான செயல்பாடுகள் கொடுக்காமல் இருப்பது தான்”, என்கிறார். மேலும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு நிரூபிக்கப்பட்ட சில வழிகளையும் அவர் பரிந்துரை செய்கிறார். அவை யாவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களுடைய உடல் கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை எப்படி கையாளுகிறது என்பதன் அடிப்படையிலேயே உடல் எடையானது அமைகிறது. 10 கிலோ கிராம் உடல் எடை குறைகிறது எனும்போது LDL கொலஸ்ட்ராலில் தோராயமாக 9 முதல் 10 mg/dL குறைகிறது என்று அர்த்தம். நீங்கள் இழக்கும் முதல் 5 முதல் 10 சதவீத உடல் எடையானது டிரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலில் சிறந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கு முயலும். சரிவிகித உணவு, சரியான உடற்பயிற்சி போன்றவை இதற்கு மிகவும் அவசியம். இதனால் உங்களுடைய மெட்டபாலிசம் சீராகி, இன்சுலின் உணர்திறன் மேம்படும்.

மேலும் மதுபானங்கள் மற்றும் புகைப்பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று டாக்டர் சிங் கூறுகிறார். ஒருவருடைய மொத்த ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான மதுபான அளவு என்ற ஒரு வரம்பு இல்லவே இல்லை என்பதையும், சிறிய அளவை எடுத்துக் கொண்டால் கூட அதனால் புற்றுநோய் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். மதுபானமானது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்துடிப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தி இதய தசை சம்பந்தப்பட்ட நோய்களை மோசமாக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

மறுபுறம் புகை பிடிப்பது பாதுகாப்பு தரும் HDL கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் பயணத்தில் ஈடுபட்டுள்ள நொதிகள் மற்றும் லிப்போ புரோட்டின் துகள்களையும் மாற்றுகிறது. இதனால் HDL செயலிழந்து இதய நாள ஓரங்களில் காயங்கள் ஏற்பட்டு, ரத்தக்கட்டு உருவாகிறது. இறுதியாக இது Atherosclerosis என்ற இரத்த நாள இறுக்க பிரச்சனையில் முடிவடைகிறது. புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தும் போது அதனால் HDL அளவுகள் மேம்பட்டு, அடுத்தடுத்த வருடங்களில் இதய பிரச்சனை ஏற்படுவதற்கான அபாயங்கள் குறைகிறது.

உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள லிப்பிடுகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஏரோபிக் பயிற்சிகள் HDL அளவை அதிகரித்து, சிறிய அளவில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இவை இரண்டும் இணைந்து டிரைகிளிசரைடுகள் அளவுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் உடல் செயல்பாடு ரத்த அழுத்தத்தை குறைத்து, இன்சுலின் எதிர்ப்பு திறன் மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகிறது.