
உலகளவில் பிரபலமாக விளங்கும் சமூக ஊடக நிறுவனமான டிக்டாக், இந்தியா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாகவே அமெரிக்க அரசு டிக்டாக்-ன் சீன உரிமையாளர் பைட் டான்ஸிடமிருந்து அமெரிக்க வர்த்தகத்தை தனியாக பிரிந்து முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்குகளை விற்கப்பட வேண்டும் என உத்திரவிட்டப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து பைட் டான்ஸ் பல முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், தீர்ப்பு சீன நிறுவனத்திற்கு எதிராகவே வந்தது. இந்த நிலையில் 2024 உத்தரவை நிறைவேற்றும் வகையில் டொனால்ட் டிரம்ப் அதிபதி வியாழக்கிழமை (செப்டம்பர் 26) முக்கியமான நிர்வாக உத்தரவை (எக்ஸிக்யூட்டிவ் ஆர்டர்) கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை சீன கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, அமெரிக்க நிறுவனம் அல்லது முதலீட்டாளர்க கட்டுப்பாட்டிற்கு கொண்ட வர வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் திட்டம்.
டிக்டாக் செயலி அமெரிக்காவில் சுமார் 170 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும் கடந்த தேர்தலில் டிரம்பின் கருத்துக்களை அமெரிக்க மக்களுக்கு கொண்டு சேர்த்ததில் டிக்டாக் பெரும் பங்கு விகித்தது மட்டும் அல்லாமல் டிவிட்டருக்கு அடுத்தப்படியாக டிக்டாக் முக்கிய டிஜிட்டல் பிரச்சார பீரங்கியாக விளங்கியது. இதனாலேயே டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடன் டிக்டாக் செயலிக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, சில முக்கியமான கட்டுப்பாடுகளை தளர்க்கப்பட்டது.
டிக்டாக்-ல் டிரம்ப்-க்கு 15 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர், கடந்த மாதம் வெள்ளை மாளிகையும் அதிகாரப்பூர்வ டிக்டாக் கணக்கைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நெருக்கமான உறவு, டிக்டாக்கை அமெரிக்காவில் தடை செய்யும் 2024 சட்டத்தின் அமலாக்கத்தை டிரம்ப் தாமதப்படுத்துவதற்கு வழிவகுத்தது.
2024ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தில், டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம் அதன் அமெரிக்க செயல்பாடுகளை விற்காவிட்டால், செயலியை அமெரிக்காவில் தடை செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
இது, அமெரிக்க மக்களின் தரவுகள் பாதுக்காப்பு மற்றும் அல்காரிதம் பிரச்சனைகள் காரணத்தால் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், சீன அரசு இந்த செயலி மற்றும் தரவுகள் மூலம் அமெரிக்க சந்தையில் ஆதிக்கம் செலுத்த கூடிய அளவில் இருப்பதாக அச்சம் அதிகரித்தது. ஜனவரி 2025 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை உறுதிப்படுத்தியது.
ஆனால், டிரம்ப் அதிபதியாகப் பதவியேற்றதும், இந்த தடை உத்தரவை அமலாக்கத்தை ஜூன் வரை தாமதப்படுத்தி, பின்னர் ஜூலை முதல் செப்டம்பர் வரை நீட்டித்தார். இந்தத் தாமதங்கள் மூலம் டிக்டாக் அமெரிக்க வர்த்தகத்தை வாங்குவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மைக்ரோசாப்ட், ஆரக்கிள் முதல் யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் வரையில் இதை வாங்க ஆர்வம் காட்டினர். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான தகவல் படி இன்று டிக்டாக் அமெரிக்க வர்த்தகம் குறித்து டிரம்ப் முக்கியமான உத்தரவில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.