இந்தப் படம் இப்போதுதான் பூஜை போட்டது மாதிரி இருந்தது. அதற்குள் படம் ரிலீஸ், தெலுங்கில் டப் என பரபரப்பாக வேலை நடந்திருக்கிறது.
பவிஷ், நாகதுர்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் `லவ் ஓ லவ்’. இப்படம் ஜூலை 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கஸ்தூரி ராஜா, “இந்த மேடைக்கு நான் பல முறை வந்திருந்தாலும், இன்று இது எனக்கு ஸ்பெஷல் மேடை. நான், என் மகன், என் பேரன் ஒரே மேடையில். இது சினிமாவில் பலருக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இடத்துக்கு வர நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். படம் பார்த்துதான் இந்தப் படம் எப்படி என தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ’லவ் ஓ லவ்’ என்ற அந்த தலைப்பே போதும். ’லவ்.. லவ்’ என அலையும் ஒருவனின் கதை.
இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது எனச் சொல்வதற்கு இன்னொரு காரணம், இப்போதெல்லாம் ஒரு ஷெட்யூல் ஷூட் போனாலே இயக்குநரும் தயாரிப்பாளரும் முகம் கொடுத்து பேசிககொள்ள மாட்டார்கள். படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநருக்கு போன் பரிசு கொடுத்தார்கள். இதைவிட என்ன வேண்டும். இந்தப் படம் இப்போதுதான் பூஜை போட்டது மாதிரி இருந்தது. அதற்குள் படம் ரிலீஸ், தெலுங்கில் டப் என பரபரப்பாக வேலை நடந்திருக்கிறது.
இன்று நாங்கள் மூவரும் இந்த மேடையில் இருந்தோம். இதில் செல்வராகவன்தான் சினிமா பிடித்து வந்தவர். தனுஷ் சினிமா பிடிக்காமல் வந்தவர். ஆறு படம் நடித்து முடிக்கும்வரை, ’என்னை விட்டுவிடுங்கள்; சென்றுவிடுகிறேன்’ என்று சொல்வார். ’துள்ளுவதோ இளமை’ படத்தில் எல்லாம் அழுதுகொண்டேதான் நடிப்பார். இப்போது நாங்கள் இந்த நிலையில் வந்திருக்கிறோம். ’பவிஷும் ஒருநாள் வந்து விஸ்காம் படிக்கிறேன்’ என்றார்.

Kasthuri RajaX
தனுஷின் ’கேப்டன் மில்லர்’, ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பணியாற்றினார். `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மூலம் நடித்தார். தனுஷ் கையில் சிறு குழந்தையாக ஒரு போட்டோ. அதைத்தான் DPயில் வைத்திருக்கிறார். இப்போது அவர் நடிகர். இப்போது எனக்கு இந்த மேடை எப்படி இருக்கும் என உங்களுக்குப் புரியும்” என்றார்.
