இந்தப் படத்தில் சத்யராஜ் சார், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமானார். இதன்பிறகு ’பன் பட்டர் ஜாம்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போது இவர் ’அல்மோஸ்ட் நல்லவன்’ படம் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறார். இப்படத்தை இயக்குவதோடு படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். துஷாரா மற்றும் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Almost Nallavan
இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தன்னுடைய Aspire Ubuntu Films மூலம் ஹெச். வினோத் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் பிரம்மா, ஹாட்ஸ்டார் சபரி, திங்க் மியூசிக் சந்தோஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் லலித் குமார், அபிஷேக் கீதம், ரங்கராஜ் பாண்டே, விது, இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இப்படத்தின் நடிகரும் இயக்குநருமான ராஜூ ஜெயமோகன் கூறியபோது, ” `அல்மோஸ்ட் நல்லவன்’ என்ற தலைப்பே இந்தப் படத்தின் மையக் கருத்தைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும், குறைகளும் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில், பலர் இரண்டு வாழ்க்கைகளை வாழ்கிறார்கள். ஒன்று அவர்களின் உண்மையான வாழ்க்கை. மற்றொன்று, சமூக வலைதளங்களில் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் முகம். சில நேரங்களில் அந்த டிஜிட்டல் அடையாளமே தங்களின் உண்மையான முகம் என்றுகூட நம்பத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் சத்யராஜ் சார், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி, நாடகக் கலைஞர் யாழினி மற்றும் பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

RajuAlmost Nallavan
அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய வித்தியாசமான டார்க் காமெடி மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இது. முதலில் இந்தக் கதையை சுதன் சார் மற்றும் வினோத் சாரிடம் கூறினேன். சினிமா பற்றிய அவர்களின் அனுபவமும் அறிவும் இந்தக் கதையை முழுமையான திரைக்கதையாக உருவாக்க என்னை ஊக்குவித்தது. இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தை நம்பி ஆதரவு அளித்த ஹெச். வினோத் சார், ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ், சுதன் சுந்தரம் சார் மற்றும் ஃபேஷன் ஸ்டூடியோஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தற்போது தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் ஃபாக்ஸன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம்” என்றார்.
