கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆடவர் அணி, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து, ஜூலை 23 முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கலந்துகொள்ளவுள்ளது. இந்தத் தொடருக்கான ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனைத் தவிர, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி சாதனை படைத்த 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவருடன் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே, வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் மற்றும் அசோக் சர்மா ஆகியோருக்கு முதன்முறையாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (து.கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஷிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்கூர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங்.
