தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய `டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பைப் பெற்றார். அடுத்தாக மாரி செல்வராஜ் இயக்கும் `மஞ்சணத்தி’ படத்திலும் நடிக்க உள்ளார்.
கன்னடத்தில் `Mugilpete’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். பின்னர் மலையாளத்தில் Pathonpatham Noottandu, Oru Jaathi Jaathakam, தெலுங்கில் Alluri, Funky போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய `டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பைப் பெற்றார். அடுத்தாக, மாரி செல்வராஜ் இயக்கும் `மஞ்சணத்தி’ படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகள் தம்மை மிகவும் பாதிப்பதாகக் கூறி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதில், “சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன். சில நேரங்களில், நாம் நம் உடலுக்குக் கொடுக்கும் அதே வகையான ஓய்வு மனதிற்கும் தேவைப்படுகிறது. நான் நிதானித்து, சிறிது நேரம் துண்டித்துக்கொண்டு, திரைக்கு அப்பால் என்னுடனும் வாழ்க்கையுடனும் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தேவையை உணர்கிறேன்.
எனக்கு ஆதரவளித்த, என்னை ஊக்குவித்த மற்றும் இங்கே அன்பைப் பரப்பிய அனைவருக்கும் நன்றி. உங்கள் செய்திகளும் அன்பும் நீங்கள் நினைப்பதைவிட எனக்கு மிகவும் முக்கியமானவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பேன், ஆனால் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருந்தால், எனது குழுவினர் இந்தக் கணக்கில் பகிர்ந்துகொள்வார்கள். அனைவருக்கும் மிகுந்த அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு கிடைக்க வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
