2050-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோய் பாதிப்புகள் 75 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உலகம் முழுவதும் 10 கோடி பணியாளர் பற்றாக்குறை ஏற்படும்.
2050-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோய் பாதிப்புகள் 75 சதவீதம் அதிகரிக்கவுள்ள நிலையில், உலகளவில் 10 கோடி பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இதன் விளைவாக உலகம் புற்றுநோய் சிகிச்சைப் பணியாளர்கள் தொடர்பான நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் ‘லான்செட்’ (Lancet) இதழின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
லான்செட் (Lancet) புற்றுநோய் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய உலகளாவிய ஆய்வு அறிக்கையின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்றும், 1.9 கோடி பேர் இதனால் உயிரிழக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையைவிட 75 சதவீதம் கூடுதலாகும்.

Nurses
புற்றுநோய் பாதிப்புகள் இவ்வாறு வேகமாக அதிகரிக்கும் அதேவேளையில், வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடி புற்றுநோய் சிகிச்சை ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்படும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, செவிலியர்கள் மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்களில் 6.8 கோடிப் பேர் வரையிலும், நோய் கண்டறியும் பிரிவில்1.6 கோடிப் பேர் வரையிலும் தட்டுப்பாடு நிலவக்கூடும்.
