ஒரே சீசனில் 65 சிக்சர்களை பறக்கவிட்டு சிக்ஸ் ஹிட்டிங் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் வாழ்த்தை பெற்றுள்ளார் 15 வயது இளம் சூறாவளி வைபவ் சூர்யவன்ஷி.
Summary
வெறும் 15 வயதிலேயே உலக கிரிக்கெட்டை அதிரவைக்கும் வைபவ் சூர்யவன்ஷி, பும்ரா, ஹசல்வுட், கம்மின்ஸ் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களை சுலபமாக சிக்சருக்கு அனுப்பி வருகிறார். ஒரே ஐபிஎல் சீசனில் 60 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயிலின் 59 சிக்ஸ் சாதனையை முறியடித்துள்ள அவர், புதிய ‘சிக்ஸ் ஹிட்டிங் மெஷின்’ என கெயில் உட்பட பல ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
உலக கிரிக்கெட்டை வெறும் 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி ஆச்சரியப்படுத்திவருகிறார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரகளான பும்ரா, ஹசல்வுட், கம்மின்ஸ் போன்ற பவுலர்களை அசால்ட்டாக சிக்சருக்கு அனுப்பும் சூர்யவன்ஷி, பல கிரிக்கெட் ஜாம்பவான்களை மிரளவைத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி
அதிலும் நேற்றைய ஒரே போட்டியில் 12 சிக்சர்களை அடித்த அவர், ஒரு ஐபிஎல் சீசனில் 60 சிக்சர்களை அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றை பெற்றுள்ளார். இதற்கு முன் சிக்ஸ் ஹிட்டிங் ஜாம்பவான் கிறிஸ் கெயில் அடித்த 59 சிக்சர்களே சாதனையாக இருந்தது, அதனை 15 வயதில் முறியடித்து மிரட்டியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
இந்நிலையில் தான் சூர்யவன்ஷியின் அபார திறமையை பாராட்டியிருக்கும் ஜாம்பவான் கெய்ல், “வைபவ் சூர்யவன்ஷி எப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான வீரர், மிகச் சிறந்த பொழுதுபோக்கு, இளைஞரே. ஐபிஎல்லின் புதிய ‘சிக்ஸ் ஹிட்டிங் மெசின்’ இவர் தான்” என பாராட்டியுள்ளார்.
அதேபோல சச்சின், யுவராஜ் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல் என பல சாம்பியன் வீரர்களும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
