நடிகர் அஜித்குமார் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Summary
2026 ஐபிஎல் தொடரில் தல தோனி விளையாடவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு, தல அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ புதிய உற்சாகத்தை தந்துள்ளது. நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடும் அஜித், பவுலிங், ஃபீல்டிங், விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்த, ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.
2026 ஐபிஎல் தொடரில் தல தோனி களமிறங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த ஐபிஎல்லில் தல தோனி விளையாடுவாரா அல்லது விளையாடாமலே ஓய்வை அறிவிப்பாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தல தோனி கிரிக்கெட் விளையாடுறதை பார்க்கலனா என்ன, தல அஜித் கிரிக்கெட் விளையாடுறதை பார்க்குறது சந்தோஷமா இருக்கு என ’அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோவிற்கு’ ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் அஜித், பவுலிங், ஃபீல்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என அனைத்தையும் சிறப்பாக செய்வதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர்.
கடந்தாண்டில் மட்டும் 2 படங்களில் நடித்த அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார். இதற்கிடையில் தன்னுடைய கார் பயணம் சார்ந்த திரைப்படம் ஒன்றையும் அஜித் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
