இடதுசாரிகளுடன் துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்த பினராயி, எல்.டி.எஃப் (LDF) மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, வலிமையுடன் மீண்டும் திரும்பும் என்று பினராயி விஜயன் கூறினார்.
கேரளாவில் கடந்த பத்தாண்டுகளாக பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

Rahul Gandhi
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பினராயி விஜயன் பேசுகையில், ”கேரளத்தில் பாஜக 3 தொகுதிகளில் வென்றுள்ளது மதச்சார்பின்மையை காக்க நினைப்பவர்களுக்கு கவலை தரும் செய்தி. தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணியை வாழ்த்துகிறேன். தாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட இருக்கிறோம். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கப்போகிறோம்’’ என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தேர்தலில் LDF தோல்வியடைந்ததற்குக் காரணம், முக்கியமாக இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகளால் உருவாக்கப்பட்ட அரசியல் சூழலே என்று பினராயி தெரிவித்தார். UDF, பாஜக மற்றும் ஊடகங்களின் ஒரு பிரிவு ஆகியவை இந்தச் சக்திகளில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
