துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னடப் படம் ‘KD: The Devil’. இப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று இரவு அப்படத்தின் ட்ரெய்லரை யூட்யூபிலிருந்து நீக்கியுள்ளது KVN நிறுவனம்.
கன்னட சினிமாவில் கணேஷ் நடித்த Sakath மூலம் சினிமா தயாரிப்பை துவங்கிய நிறுவனம் KVN. கன்னடம் மட்டுமல்லாது தமிழில் விஜயின் `ஜனநாயகன்’, இந்தியில் சைஃப் அலிகான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் நடிக்கும் `Haiwaan’, மலையாளத்தில் சிதம்பரம் இயக்கியுள்ள `Balan: The Boy’, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் `Mega158′ ஆகிய படங்களை தயாரித்து வருகின்றனர்.
இவற்றில் விஜயின் `ஜனநாயகன்’ படம் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக வெளியாகவில்லை. இப்போது KVN தயாரித்துள்ள இன்னொரு படத்துக்கும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னட படம் ‘KD: The Devil’. இப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று இரவு அப்படத்தின் ட்ரெய்லரை யூட்யூபிலிருந்து நீக்கியுள்ளது KVN நிறுவனம்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட பதிவில், “சமீபத்தில் யூட்யூபில் வெளியிடப்பட்ட ‘KD: The Devil’ திரைப்படத்தின் ட்ரெய்லரில், கவனக்குறைவாக சில சான்றளிக்கப்படாத உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே, நாங்கள் அந்த ட்ரெய்லரை நீக்கிவிட்டோம், மேலும் சான்றிதழ் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம். இந்தக் கவனக்குறைவுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம், மேலும் அனைத்துச் சான்றிதழ் விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

KVN KD The Devil
ஏற்கெனவே ‘KD: The Devil’ படத்தின் இந்திப் பாதிப்பு பாடலான ‘Sarke Chunar Teri Sarke’ வெளியாகி, அதிலிருந்த இரட்டை அர்த்த வரிகளால் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அதனை நீக்கினார்கள். அதற்கு முன்னர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் Toxic படத்தின் டீசர் வெளியாகி அதுவும் சர்சையானது. சான்றிதழ் சிக்கலால் தேங்கி இருக்கும் விஜயின் `ஜனநாயகன்’ படம் சமீபத்தில் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. இப்போது ‘KD: The Devil’ பட ட்ரெய்லர் நீக்கம் என KVN தயாரிப்பு நிறுவனம் சுற்றி எப்போதும் பல சர்ச்சைகள் தொடர்கிறது.
