சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 104 ரன்னில் சுருண்டது மட்டுமில்லாமல், 103 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று மிகப்பெரிய தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ். அதன் மூலம் 5 மோசமான சாதனைகளை படைத்தது!
1. மிகப்பெரிய தோல்வி

ஐபிஎல் வரலாற்றில் 100 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மட்டுமே அதிகபட்ச தோல்வியாக தோல்வியாக இருந்தது. இந்தமுறை 103 ரன்கள் வித்தியாசத்தில் என்ற மோசமான தோல்வியை பதிவுசெய்தது மும்பை.
2. வான்கடேவில் மோசமான சாதனை

மும்பை, சிஎஸ்கே
மும்பை இந்தியன்ஸின் கோட்டையான வான்கடேவில் முதல்முறையாக 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை, இதற்கு முன்பு அதிகபட்சமாக 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே அதிகமாக இருந்தது.
3. சிஎஸ்கேவிற்கு எதிராக மோசமான தோல்வி

மும்பை இந்தியன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 136 ரன்கள் மட்டுமே குறைவான டோட்டலாக இருந்த நிலையில், முதல்முறையாக 104 ரன்களில் சுருண்டது மும்பை அணி.
4. ஒரு அணிக்கு எதிராக அதிக தோல்வி

சிஎஸ்கே, 2026
ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக அதிக தோல்விகளை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சிஎஸ்கே மும்பைக்கு எதிராக 19 வெற்றிகளை பதிவுசெய்து முதலிடத்தில் நீடிக்கிறது.
5. வான்கடேவில் ஹாட்ரிக் தோல்வி

சஞ்சு சாம்சன்
முதல்முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் முதல் 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக தோற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி, இதன்மூலம் மும்பையின் கோட்டை வான்கடே என்பது தகர்க்கப்பட்டுள்ளது.
