ஏற்கெனவே பிரதீப் தமிழில் நடித்த ‘லவ் டுடே’ , ‘டிராகன்’ மற்றும் `ட்யூட்’ போன்ற படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அந்த மாநிலங்களிலும் பிரதீப் பெரிய வரவேற்பை பெற்றார்.
Summary
லவ் டுடே, டிராகன், ட்யூட் ஆகியவை தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், பிரதீப் ரங்கநாதன் இப்போது முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் `கோமாளி’ மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றிபெற்றவர் பிரதீப் ரங்கநாதன். பின்னர் `லவ் டுடே’ படத்தை இயக்கி நாயகனாகவும் அறிமுகமானார். ஹீரோவாக அவருக்கு கிடைத்த வரவேற்பினால் `டிராகன்’, `ட்யூட்’, படங்களில் நடித்து அப்படங்களும் வெற்றி பெற்றன. இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்துள்ள LIK படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

Pradeep Ranganathan
தற்போது விஷயம் என்ன என்றால் பிரதீப் ரங்கநாதன் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் உலவி வருகிறது. தெலுங்கில் `Aithe’, `Anukokunda Oka Roju’, `Sahasam’, `Manamantha’ போன்ற படங்களை இயக்கிய சந்திர சேகர் யெலெட்டி இயக்கும் படத்தின் மூலம் தான் தெலுங்கில் பிரதீப் அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பிரதீப் தமிழில் நடித்த ‘லவ் டுடே’ , ‘டிராகன்’ மற்றும் `ட்யூட்’ போன்ற படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அந்த மாநிலங்களிலும் பிரதீப் பெரிய வரவேற்பை பெற்றார்.
இப்போது பிரதீப் ரங்கநாதன் தெலுங்கில் ஒரு முதல் முழு நீளப் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை என்றாலும், வரவிருக்கும் இப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
