2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது..
Summary
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுக-பாஜக கூட்டணியில் ஐந்து முக்கிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை பெரும்பாலும் திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பகுதிகள் என்பதால் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார், ஆனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது கட்சிக்கு சவாலாக இருக்கலாம்.
அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் வெளியிட்டார். இதில் பெரும்பாலும் திமுக அமைச்சர்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஜிகே வாசன்
நடைபெறள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐந்து தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் பெரும்பாலான தொகுதிகள் திமுக அமைச்சர்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் என்பதால் வெற்றி பெறுவதில் எளிய காரியம் அல்ல, தொடக்கத்திலேயே தமாகவிற்கு அதிர்ச்சி அளக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் தங்களுக்கு கூடுதலான தொகுதி வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் வலியுறுத்தி வந்தார். அதன் பிறகு உத்தேச பட்டியலும் கொடுக்கப்பட்டது. இதில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியுள்ளது.
திமுகவிற்கு நேர் எதிராக களம்காணும் தமாகா!
தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக அமைச்சர் முத்துசாமியும், ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதிகளாகும், அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து 6 முறை வென்ற ஒட்டன்சத்திரம் தொகுதியும் தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தொடர்ந்து 6 முறையும், சாக்கோட்டை அன்பழகன் 3 முறையும் வென்ற கும்பகோணம் தொகுதியும் தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ் குமாரின் தொகுதியுமான கிள்ளியூரில் தமாகா போட்டியிடுகிறது. தமாக கடந்த தேர்தலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்று பிறகு ஆறு சட்டமன்ற தொகுதியை பெற்று போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் இன்று தேர்தல் அறிக்கை உடன், வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி,
1. ராணிப்பேட்டை – வி.எம். கார்த்திகேயன்
2. ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா
3. ஒட்டன்சத்திரம் – விடியல் எஸ்.சேகர்
4. கும்பகோணம் – எம்.கே.ஆர்.அசோக்குமார்
5. கிள்ளியூர் – லிவின் சைமன்
உள்ளிட்டோர் களம்காணவிருக்கின்றன. தமாகா சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களும் அந்தத்த தொகுதியில் செல்வாக்கு மிக்க பின்னணியை கொண்டிருப்பதால் டஃப் கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் அவர்களுடைய சொந்த சின்னத்தை விடுத்து தாமரை சின்னத்தில் போட்டியிடுவது அவர்களுக்கு பின்னடைவாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
