வங்கதேசத்தில், இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியும் (BNP), அதன் போட்டியாளரும் ஒருகாலத்தில் அக்கட்சியின் கூட்டாளியுமாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் களத்தில் உள்ளன.
வங்கதேசத்தில், இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியும் (BNP), அதன் போட்டியாளரும் ஒருகாலத்தில் அக்கட்சியின் கூட்டாளியுமாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் களத்தில் உள்ளன.
அண்டை மாநிலமான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு கலீதா ஜியா இறந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். காரணம், இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவின் கட்சி, இந்தத் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளது. கலீதா ஜியாவோ உடல்நிலை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் காலமானார்.

ஷேக் ஹசினா, கலிதா ஜியா
அதேநேரத்தில், கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியும் (BNP), அதன் போட்டியாளரும் ஒருகாலத்தில் அக்கட்சியின் கூட்டாளியுமாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் களத்தில் உள்ளன. லண்டனில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு, சமீபத்தில் நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் மைய-வலதுசாரி BNP 10 கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார். மறுபுறம், ஜமாத் என்று அழைக்கப்படும் ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷ் (JIB), 11 கட்சிகளைக் கொண்ட கூட்டணியை வழிநடத்துகிறது. 2024ஆம் ஆண்டு ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியும் (NCP) இந்தக் கூட்டணியில் அடங்கும். இந்தக் கட்சிக்கு 67 வயதான ஷஃபிகுர் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். இருதரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில், 51 அரசியல் கட்சிகளும் சுமார் 2,000 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 299 தொகுதிகளில் (1 தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது) வாக்குப்பதிவு காலை 7:30 மணிக்கு (உள்ளூர் நேரம்) தொடங்கியது. மாலை 4:30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 42,766 வாக்குச்சாவடிகளில் 127 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த உள்ளனர். தேர்தலுக்காக கிட்டத்தட்ட 1 மில்லியன் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது நாட்டில் இதுவரை ஒரு தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

தாரிக் ரகுமான்
வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவருமான தாரிக் ரஹ்மான், நாட்டின் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில், வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார். அவரது பெற்றோர் ஒரு காலத்தில் செய்ததுபோல், அவர் பிரதமராகி வங்கதேசத்தை வழிநடத்த முடியும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
