1962ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பல வகைகளில் திருப்புமுனையாக அமைந்தது.
1962ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பல வகைகளில் திருப்புமுனையாக அமைந்தது. மாநில அரசியலில் காங்கிரஸின் சரிவு மற்றும் திமுகவின் எழுச்சியின் தொடக்கமாக இத்தேர்தல் அமைந்தது
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பின்னணி என்ன… தமிழ்நாட்டுக்கு எந்த வகையில் இது திருப்புமுனைத் தேர்தலாக அமைந்தது என்பதை இப்போது பார்க்கலாம்…1962ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பல வகைகளில் திருப்புமுனையாக அமைந்தது. மாநில அரசியலில் காங்கிரஸின் சரிவு மற்றும் திமுகவின் எழுச்சியின் தொடக்கமாக இத்தேர்தல் அமைந்தது.

காமராஜர்
முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. திமுக அங்கீகாரம் பெற்று முதன்முறையாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்து சுதந்திரா என்ற கட்சியை தொடங்கி போட்டியிட்டார் ராஜாஜி. திமுகவிலிருந்து பிரிந்த இ.வி.கே.சம்பத் தமிழ் தேசியக் கட்சியை தொடங்கி போட்டியிட்டார். தந்தை பெரியார் காங்கிரஸுக்குஆதரவாக பரப்புரை செய்தார்.
தமிழ்த் திரையுலகில் இரு பெரும் நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர் திமுகவுக்காகவும் சிவாஜி கணேசன் காங்கிரஸுக்காகவும் பரப்புரை செய்தனர். இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி, விலைவாசி உயர்வு ஆகியவை இத்தேர்தலின் முக்கிய பேசுபொருட்களாக அமைந்தன. 206 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 139 இடங்களில் வென்றது. ஆயினும் கடந்த முறையைவிட இது 12 இடங்கள் குறைவு. தமிழ் மண்ணில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது இதுவே கடைசி முறை. 1957இல் 15 இடங்களில் மட்டுமே வென்றிருந்த திமுக, இம்முறை50 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 27% வாக்குகளையும் திமுக வென்றிருந்தது.

அண்ணா மற்றும் கருணாநிதி
ராஜாஜியின் சுதந்திரா கட்சி 6 இடங்களில் மட்டுமே வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் வென்றது, இ.வி.கே.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. முதல்வர் காமராஜர் சாத்தூர்தொகுதியில் வென்ற நிலையில், அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வியுற்றார். கருணாநிதி தஞ்சை தொகுதியில் வெற்றிவாகை சூடினார். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றிபெற்றார். காமராஜர் 3ஆவது முறையாக முதல்வரான நிலையில் திமுக முதல்முறையாக எதிர்க்கட்சியானது. நெடுஞ்செழியன் எதிர்க்கட்சி தலைவராகவும் கருணாநிதி எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர்.
