இந்திய போட்டியைப் புறக்கணிப்பது தொடர்பாக பாகிஸ்தான் 24 மணி நேரத்தில் இறுதி முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஐசிசியுடன் நடைபெற்ற கூட்டத்திற்கு, 24 மணி நேரத்தில் இறுதி முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை, அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷெரீபும் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். அதேநேரத்தில், இதுதொடர்பாக இதுதொடர்பாக பாகிஸ்தான் கடிதம் அளித்த நிலையில், அதுகுறித்து ஐசிசி விளக்கம் கேட்டிருந்தது. முன்னதாக, ‘ஃபோர்ஸ் மஜூர்’ விதியைப் பயன்படுத்துமாறு பாகிஸ்தான் ஐசிசியிடம் வலியுறுத்தி இருந்தது.

ind, wc, pak
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானை இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருந்தது. ’பரம எதிரிகளான இரு அணிகளுக்கும் இடையேயான பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி நடைபெறாவிட்டால், அது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவுடன் இணைந்து இந்தத் தொடரை நடத்தும் தீவு நாட்டில் போட்டியின் அமைப்பு மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்குப் பிறகு, ‘இந்திய புறக்கணிப்பு’ நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய போட்டியைப் புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் 24 மணி நேரத்தில் இறுதி முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. லாகூரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு பாகிஸ்தான் கூட்டாட்சி அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
