Skip to content

துருக்கிக்கு போர் விமானம் விற்பனை | அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்ரேல்!

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவோடு மாறுபட்டாலும், அதிபர் ட்ரம்புக்கும் தமக்கும் இடையே எந்தவொரு பெரிய பிளவோ அல்லது மோதலோ இல்லை என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவோடு மாறுபட்டாலும், அதிபர் ட்ரம்புக்கும் தமக்கும் இடையே எந்தவொரு பெரிய பிளவோ அல்லது மோதலோ இல்லை என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.

துருக்கிக்கு எஃப்-35 (F-35) ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஜெட் இன்ஜின்களை அமெரிக்கா விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதற்கு இஸ்ரேல் அதிருப்தி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், துருக்கிக்கு எஃப்-35 (F-35) ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஜெட் இன்ஜின்களை அமெரிக்கா விற்பனை செய்வதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேட்டோ மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி சென்றுள்ள நிலையில், இதை உறுதிப்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “துருக்கிக்கு எஃப்-35 விமானங்கள் அல்லது போர் விமான என்ஜின்களை வழங்குவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அதிகார சமநிலையைக் குலைக்கும்” என எச்சரித்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு

தற்போதைய அதிகார சமநிலையானது இஸ்ரேலின் வான்வழி மேலாதிக்கத்தாலும், அமெரிக்காவின் பலத்தாலுமே பாதுகாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகனையும் நெதன்யாகு விமர்சித்துள்ளார். துருக்கியின் தற்போதைய ஆட்சி ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவிற்கு அது ஒரு சிறந்த நட்பு நாடாக இருக்க முடியாது என்றும் விமர்சித்துள்ள அவர், ஒட்டோமான் பேரரசை மீண்டும் நிலைநாட்டும் ஆக்கிரமிப்பு எண்ணம் துருக்கிக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவோடு மாறுபட்டாலும், அதிபர் ட்ரம்புக்கும் தமக்கும் இடையே எந்தவொரு பெரிய பிளவோ அல்லது மோதலோ இல்லை என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?

உலகம்

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

உலகம்

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

உலகம்

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

உலகம்

ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!

உலகம்

4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை.. ட்ரெண்டிங்கில் ஜப்பான் விஞ்ஞானியின் வொர்க்அவுட்! நன்மை என்ன?

உலகம்
துருக்கிக்கு போர் விமானம் விற்பனை | அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்ரேல்! | LeeNews