Skip to content

தட்டித் தூக்கிய பிரக்ஞானந்தா! அமெரிக்க பட்டம் வென்ற முதல் இந்தியராக வரலாறு.. தடம்பதித்த தமிழன்!

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கவனம் ஈர்த்து, புதிய வரலாறு படைத்திருக்கிறார். Summary அமெரிக்காவின் செயிண்ட்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கவனம் ஈர்த்து, புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

Summary

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற உலகப் புகழ் Grand Chess Tour போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தலான கம்பேக் மூலம் ஃபேபியானோ காருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். ஆரம்பத்தில் 9-3 என பின்தங்கியிருந்த அவர், இறுதியில் வரலாற்றில் இடம்பிடித்து இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியராக 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசும் பெற்றுள்ளார்.

உலகின் மிகப் பெரிய செஸ் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்காவின் Grand Chess Tour போட்டி, அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான அமெரிக்காவின் ஃபேபியானோ காருவானாவை எதிர்த்து களம் கண்டார். முதல் இரண்டு கிளாசிக்கல் சுற்று ஆட்டங்களில், அமெரிக்காவின் ஃபேபியானோ காருவானாவை விட பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க வீரர், அடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற இறுதி சுற்றில் இருவரும் டிரா செய்தனர். இதனால் இருவருக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Praggnanandhaa

இறுதியில், 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபேபியானோ காருவானாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பின்தங்கியிருந்த பிரக்ஞானந்தா, அசத்தலான கம்பேக் கொடுத்து போட்டியை தலைகீழாக மாற்றி, பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் Grand Chess Tour பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், பிரக்ஞானந்தாவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1.9 கோடி ரூயாகும். தொடர்ந்து சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா