Skip to content

QR Code மூலம் யாசகம் பெறும் ROBO.. சீனாவில் நடப்பது என்ன..? வைரலாகும் வீடியோ!

சீ​னா​வில் கியூஆர் கோடு அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெருவில் மண்​டி​யிட்டு யாசகம் பெரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது. Summary சீனாவில், யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

சீ​னா​வில் கியூஆர் கோடு அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெருவில் மண்​டி​யிட்டு யாசகம் பெரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது.

Summary

சீனாவில், யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் மனித வடிவ ரோபோக்களை வீட்டு வேலைகள், தொழிற்சாலைகள், தீயணைப்பு, பேரிடர் மீட்பு போன்ற துறைகளில் பயன்படுத்துகிறது. செங்டூ உள்ளிட்ட நகரங்களில், மின்சார கட்டணம் செலுத்த பணம் இல்லை எனக் கூறி, கியூஆர் கோடு மூலம் யாசகம் கேட்கும் ரோபோவின் விளம்பர வீடியோ வைரலாகி, எதிர்கால பிச்சைக்காரர் வேலைகளையும் ரோபோக்கள் பறிக்குமா என்ற விவாதத்தை தூண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால், ரோபோக்களின் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது. தொழிற்சாலைகள் முதல் அன்றாடச் சேவைகள் வரை ரோபோக்கள் பெருமளவில் களமிறக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

Humanoid Robot

சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. ஒரு ரோபோ​வின் ஆரம்ப விலை ரூ.16 லட்​ச​மாக உள்ளது. இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும் இவை ஈடு​படுத்​தப்​படு​கின்​றன.

யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் தனது ரோபோக்​களை மக்களிடம் பிரபலப்​படுத்த நூதன விளம்​பரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்​படி சீனா​வின் சிச்​சு​வான் மாகாண தலைநகர் செங்​டூ​வின் பிர​தான சாலை​யில் யூனிட்ரீ நிறு​வனத்​தின் ஒரு ரோபோ, கியூஆர் கோடு அட்​டை​யுடன் யாசகம் கோரி வரு​கிறது. இந்த ரோபோ மண்​டி​யிட்டு அமர்ந்​து, கைகளை கூப்பி யாசகம் கோரு​கிறது. “மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை. எனவே யாசகம் அளித்து உதவுங்​கள்” என்று ரோபா உருக்​க​மாக கூறுகிறது.

யாசகம் எடுக்​கும் இந்த ரோபா​வின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வரு​கிறது. செங்டூ மட்​டுமன்றி தலைநகர் பெய்​ஜிங் உள்​ளிட்ட நகரங்​களி​லும் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் சார்பில் இதே பாணி​யில் நூதன விளம்​பரம் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகிறது.

இந்த ரோபோவை வெறும் வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி, தொழிற்சாலைகளில் கடினமான பணிகளைச் செய்யவும் பயன்படுத்த முடியும் என்று இதன் தயாரிப்பு நிறுவனமான Unitree Robotics தெரிவித்துள்ளது.

Unitree

இருப்பினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் “எதிர்காலத்தில் பிச்சைக்காரர்களின் வேலையையும் AI மற்றும் ரோபோக்கள் பறித்துவிடும் போலிருக்கிறது” என்ற விவாதத்தையும், வேடிக்கையான மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?

உலகம்

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

உலகம்

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

உலகம்

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

உலகம்

ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!

உலகம்

4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை.. ட்ரெண்டிங்கில் ஜப்பான் விஞ்ஞானியின் வொர்க்அவுட்! நன்மை என்ன?

உலகம்
QR Code மூலம் யாசகம் பெறும் ROBO.. சீனாவில் நடப்பது என்ன..? வைரலாகும் வீடியோ! | LeeNews