புதுக்கோட்டை| முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை.!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
புதுக்கோட்டை இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு வீடு திரும்பும் வழியில் பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் மர்ம நபர்களால் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இடம் தொடர்பான வழக்கு, முத்துலட்சுமி உடனான நிலத் தகராறு உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி என்பவருக்கும் ஏற்கனவே இட பிரச்சனை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், இந்த வழக்கில் நாகராஜ் மீது இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலைக்கான காரணம் இடம் சம்பந்தமான பிரச்சனையா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜ் ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!
தமிழ்நாடு
விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
தமிழ்நாடு
”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!
தமிழ்நாடு
கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தமிழ்நாடு
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?
தமிழ்நாடு