Skip to content

பயனற்ற கைபேசி, மடிக்கணினியை குப்பையில் வீசுகிறீர்களா? எதிர்வரும் பேராபத்து!!

பழைய மற்றும் பயன்பாடில்லாத கைபேசி, பவர் பேங், மடிக்கணினி இவற்றையெல்லாம் வீட்டிலோ அல்லது குப்பையில் தூக்கி வீதுவதால் உண்டாகும் ஆபத்து தெரியுமா? இதனால் ஏற்படும்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

பழைய மற்றும் பயன்பாடில்லாத கைபேசி, பவர் பேங், மடிக்கணினி இவற்றையெல்லாம் வீட்டிலோ அல்லது குப்பையில் தூக்கி வீதுவதால் உண்டாகும் ஆபத்து தெரியுமா? இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கைபேசி, மடிக்கணினி, ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்ஃபோன், பவர் பேங்க் என பெரும்பாலான மின்னணு சாதனங்களில் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சாதனங்கள் பழுதாகும்போது நம்மில் பலரும், அவற்றில் உள்ள தரவுகள் மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக, பயன்படுத்தாமல் அப்படியே வீட்டில் வைத்திருப்பது அல்லது முறையாக அப்புறப்படுத்தாமல் குப்பையில் வீசுவதுண்டு. ஆனால் இதனூடே பேராபத்து மறைந்துள்ளது.

பொதுவாக அதிக வெப்பத்தால் லித்தியம் பேட்டரிகள் வீங்கி, தீ விபத்து நேரிடலாம் என்றும், அதனால் சேதமடைந்த பேட்டரிகளைத் தொடர்ந்து வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டம் எச்சரித்துள்ளது. மேலும் பழைய கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அகற்றுவதற்கு முன், அவற்றில் உள்ள புகைப்படங்கள், தரவுகள் போன்றவற்றை பேக்அப் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்துக் கணக்குகளிலிருந்து வெளியேறுவது மற்றும் ஃபேக்டரி ரீசெட் செய்வது போன்றவை அவசியம் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்..

முக்கியமாக பழைய மின்னணு சாதன பொருட்களையோ, அவற்றின் லித்தியம் பேட்டரிகளையோ, சாதாரண குப்பை தொட்டியில் போடாமல், அவற்றை அங்கீகரிக்கப்பட்ட இ-வேஸ்ட் அல்லது பேட்டரி கலெக்ஷன் சென்டரில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டம் அறிவுறுத்துகிறது. இதனால் தீ விபத்தையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கலாம்.

பயனற்ற கைபேசி, மடிக்கணினியை குப்பையில் வீசுகிறீர்களா? எதிர்வரும் பேராபத்து!! | LeeNews