Skip to content

முழுவதும் மை இருட்டில் மூழ்குகிறது! நூற்றாண்டு காணாத அதிசய கிரகணம்! தமிழ்நாட்டில் தெரிய வாய்ப்பு?

எகிப்து என்றாலே பிரமாண்ட பிரமீடுகள், கோயில்கள், நினைவுச்சின்னங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றின் மையமான லக்சர், ‘உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம்’ என கருதப்படுகிறது.

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

எகிப்து என்றாலே பிரமாண்ட பிரமீடுகள், கோயில்கள், நினைவுச்சின்னங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றின் மையமான லக்சர், ‘உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம்’ என கருதப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்நகரம் பகலிலேயே இருளில் மூழ்கப் போகிறது. ஏன்?

Summary

2027 ஆகஸ்ட் 2 அன்று வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நூற்றாண்டு காணாத நீண்ட முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அட்லாண்டிக் கடலில் தொடங்கி எகிப்தின் லக்சர் வரை நீளும் பாதையில் 6 நிமிடம் 23 விநாடி முழு கிரகணம் தென்படும். நாசா தகவல்படி 2114 வரை இத்தகைய நீளமான கிரகணம் இல்லை. இந்தியா, தமிழ்நாட்டில் பகுதி கிரகணமே தெரியும்.

2027 ஆகஸ்ட் 2-ம் தேதி, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதில், லக்சர் அருகே அதிகபட்சமாக 6 நிமிடங்கள் 23 விநாடிகள் முழு கிரகணத்தை காண முடியும். நாசாவின் தகவல்படி, 2114-ம் ஆண்டு வரை உலகில் வேறு எந்த இடத்திலும் இத்தனை நீண்ட முழு சூரிய கிரகணம் காணப்படாது.

அட்லாண்டிக் கடலில் தொடங்கும் கிரகணப் பாதை ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ வழியாக அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா வரை நீள்கிறது. சுமார் 259 கி.மீ. அகலம் கொண்ட இந்தப் பாதையில் காடிஸ், டாங்கியர், ஓரான், பெங்காசி, ஜெட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களும் இடம்பெறுகின்றன.

Solar Eclipse Reuters

ஆனால், மன்னர்களின் பள்ளத்தாக்கும், ராணிகளின் பள்ளத்தாக்கும் சூழ்ந்துள்ள லக்சர், கிரகணத்தை காண மிகச் சிறந்த பின்னணியை வழங்கும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.

அன்றைய தினம் காலை 11.40 மணியளவில் பகுதி கிரகணம் தொடங்கி, மதியம் 1.05 மணிக்கு முழு கிரகணத்தை அடையும். கோடையில் லக்சரின் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்பதால், வெப்பமும் தூசியும் சவாலாக இருக்கும்.

இதற்கிடையில், கிரகணத்தை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுவதுடன், தங்குமிடக் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. வானியல் சுற்றுலாவுக்கு ஆப்பிரிக்கா முக்கிய இடமாக உருவாகி வரும் நிலையில், 2027-ம் ஆண்டின் இந்த அரிய கிரகணம் உலகின் கவனத்தை எகிப்தின் லக்சர் மீது திருப்பியுள்ளது.

Solar Eclipse Reuters

2027 ஆகஸ்ட் 2-ம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இந்தியாவிலும் தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முழு கிரகணம் இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் பகுதி கிரகணமாக மட்டுமே காணப்படக் கூடும். முழு கிரகணத்தை காண எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் மட்டுமே அது சாத்தியம்.

தொடர்புடைய செய்திகள்

நிலவில் வாழும் உயிர்கள்? நாசா கொடுத்த ஷாக் தகவல்!

சுற்றுச்சூழல்

மனிதர்களைத் தாக்குபவை ஆட்கொல்லி விலங்குகளா? சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுவது என்ன?

சுற்றுச்சூழல்

பூமி எடுத்த மிரளவிடும் Selfie! உறைந்துபோன விண்வெளி வீரர்கள்! அப்படி என்ன பார்த்தார்கள்?

சுற்றுச்சூழல்

மனித உணர்ச்சிகளை நாய்கள் எவ்வாறு உணர்கின்றன?: புதிய ஆய்வு

சுற்றுச்சூழல்

சென்னை, டெல்லி நிலத்தடி நீர் பற்றாக்குறை.. இந்தியப் பெருநகரங்களைச் சூழும் வெப்ப ஆபத்து!!

சுற்றுச்சூழல்

தேனீக்களுக்கு வெறும் பூக்கள் போதாது; ஆபத்தில் தேனீக்கள் – புதிய ஆய்வு!

சுற்றுச்சூழல்