Skip to content

முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேசிய உதயநிதி.. சட்டப்பேரவையில் நடந்த சர்ப்ரைஸ்! – அப்செட்டில் பாஜக!

சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது, முதல்வர் விஜய்க்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். Summary தொகுதி

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது, முதல்வர் விஜய்க்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Summary

தொகுதி மறுவரையறை மசோதாவை 25 ஆண்டுகள் தள்ளி வைக்க வேண்டும், 33% மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும் 1971 கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்தின் 7.18% விகிதம் குறையக்கூடாது என வலியுறுத்தி, முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு உதயநிதி சட்டப்பேரவையில் திறம்பட ஆதரவு தெரிவித்தது, திமுக பாஜக கூட்டணி பேச்சு, எம்.பி.க்கள் கூட்ட புறக்கணிப்பு போன்ற பின்னணியில் புதிய அரசியல் சமிக்ஞையாக மதிக்கப்படுகிறது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதமே இது தொடர்பான மசோதா முன்மொழியப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு இல்லாததால் மசோதா தோல்வி அடைந்தது. இந்நிலையில் மீண்டும் இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டுவந்தார்.

தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ‘Fair Delimitation’ என்ற பெயரில் தென்னிந்திய முதல்வர்கள் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்களுடன் ஒரு கூட்டம் கூட்டினோம். தொகுதி மறுவரையறையை இன்னும் 25 ஆண்டுகள் தள்ளிப்போட வேண்டுமென அந்தக் கூட்டத்தில் முடிவெடுத்தோம்.

தொகுதி மறுவரையறை நகலை எங்களின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எரித்தார். எங்களின் எதிர்ப்பால்தான் பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் வந்த தொகுதி மறுவரையறை மசோதா முறியடிக்கப்பட்டது. 33% மகளிர் இடஒதுக்கீட்டை திமுக ஆதரிக்கிறது. அதற்காக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் விகிதம் 7.18%-ல் இருந்து குறையக்கூடாது எனக் கேட்டு தீர்மானத்தை ஆதரிக்கிறோம்” என பேசியிருந்தார்.

Udhayanidhi Stalin vs Vijay

திமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதனால் தொகுதி மறுவரையறை மீதான மசோதாவை ஆதரிக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூட்டிய அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்நிலையில், முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!

தமிழ்நாடு

விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?

தமிழ்நாடு

”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!

தமிழ்நாடு

கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?

தமிழ்நாடு

புதுக்கோட்டை| அரசுப் பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்! பழங்குடியின மாணவிகளை தள்ளிவிட்ட நடத்துநர்?

தமிழ்நாடு