மொரோக்கோவிலிருந்து படையெடுத்த மக்கள்.. கடலில் மூழ்கி 34 பேர் உயிரிழந்த சோகம்!! காரணம் என்ன?
ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டுப் பகுதியான செயுதா’ நகருக்குள், மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் குவியத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பாவின் நுழைவாயிலான ஸ்பெயினின் ‘செயுதா’

ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டுப் பகுதியான செயுதா’ நகருக்குள், மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் குவியத் தொடங்கியுள்ளனர்.
ஐரோப்பாவின் நுழைவாயிலான ஸ்பெயினின் ‘செயுதா’ நகரின் மொத்த மக்கள் தொகையே 83 ஆயிரம் பேர்தான். ஆனால் இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 ஆயிரம் பேர் மொராக்கோவிலிருந்து கடலில் நீந்தியபடியும், வேலிகளைத் தாண்டியபடியும் படையெடுத்திருக்கின்றனர். கடலில் மூழ்கி 34 பேர் உயிரிழந்த சோகமும் நேரிட்டுள்ளது. செயுதாவுக்குள் நுழைந்தவர்கள் பூங்காக்கள், சாலைகளில் குவிந்துள்ளனர்.
Migrants Reuters
அண்மையில், செயுதாவுக்குள் நுழைய முயன்று கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை, உடனே திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதே, மொராக்கோ நாட்டினரின் படையெடுப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நிலைமை கைகமீறியதை அடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ராணுவத்தை களமிறக்கியுள்ளார். உள்ளூர் நிர்வாகம் இதனை ‘மனிதப்பேரழிவு அவசர நிலை’ என அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயின் அரசின் தாராளமான குடியேற்றக் கொள்கைகள்தான் இந்த எல்லைப் பாதுகாப்புச் சீர்கேட்டிற்குக் காரணம் என பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைப்பதிவு செய்துள்ளனர். எல்லைகளை மீட்டெடுக்கவும், இயல்புநிலையைத் திருப்பிக் கொண்டுவரவும் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அரசுகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?
உலகம்
18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!
உலகம்
’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!
உலகம்
முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!
உலகம்
ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!
உலகம்