Skip to content

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 20 பேர் காயம்!

கேரளாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.. Summary கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்காக குடும்பத்தினர்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

கேரளாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது..

Summary

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்காக குடும்பத்தினர் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துமனைகளில் அனுமதி. முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பெட்ரோல் பங்க் விளம்பர போடு தூண் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மற்றொருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது..?

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியிலிருந்து திருமண நிகழ்வுக்காக பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து கூத்தாட்டுகுளம் பகுதியின் அருகே வைத்து கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் விளம்பர போடு தூண் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த சுமார் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா பேருந்தானது பயணிகளுடன் கூத்தாட்டுகுளம் அருகே காக்கூர் பகுதியில் கொண்டிருந்த போது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென வலது புறமாக திரும்ப முயன்றதால் இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை வலது புறமாக சட்டென்று திருப்பிய போது வேகமாக சென்ற அந்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் விளம்பர போடின் தூண் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளர்.

இந்த நிலையில் சுற்றுலா பேருந்து விளம்பர போடு தூண் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான பத பதைக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா