Skip to content

கடலுக்கடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை.. புதிய மைல்கல்லைத் தொட்ட சீனா!

கடலுக்கடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை சீனா அமைத்திருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோ (Qingdao)

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

கடலுக்கடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை சீனா அமைத்திருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோ (Qingdao) நகரில்தான் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை திட்டத்தின் ஒட்டுமொத்த நீளம் 17.48 கிலோமீட்டர் ஆகும். இதில் 9.95 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதி நேரடியாகக் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதையில் வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது, கிங்டாவோவின் முக்கிய நகர்ப்புறப் பகுதிக்கும், அதன் மேற்குக் கடற்கரை புதிய மாவட்டத்திற்கும் (Huangdao) இடையேயான பயண நேரத்தை இது வெறும் 15 நிமிடங்களாகக் குறைக்கும்.

ஜியாசோவ் வளைகுடாவின் இருபுறமும் உள்ள பகுதிகளின் இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய கவச சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் (Main shield tunneling) ஜூலை 14, 2026 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மேலும், இந்தச் சுரங்கப்பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 2027 டிசம்பர் வாக்கில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சீனா ‘தைஹூ’ (Lake Taihu) ஏரியின் அடியில் 10.79 கி.மீ நீளமுள்ள நீருக்கடியிலான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை கடந்த 2021ஆம் ஆண்டு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?

உலகம்

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

உலகம்

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

உலகம்

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

உலகம்

ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!

உலகம்

4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை.. ட்ரெண்டிங்கில் ஜப்பான் விஞ்ஞானியின் வொர்க்அவுட்! நன்மை என்ன?

உலகம்