கச்சா எண்ணெய் இறக்குமதி.. இந்தியா பக்கம் திரும்பிய டிரம்பின் கோபம்! காரணம் என்ன?
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100 சதவீத விதிக்கும் வகையிலான புதிய மசோதா அமெரிக்க

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100 சதவீத விதிக்கும் வகையிலான புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100 சதவீத விதிக்கும் வகையிலான புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு கூடுதல் பொருளாதார அழுத்தம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாயைக் குறைப்பதன் மூலம், அந்த நாட்டின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதாரத்தை கட்டுப்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய்
இந்த மசோதாவின் படி, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு 100 சதவீத சுங்கவரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுடன் தொடரும் எரிசக்தி வர்த்தகத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதேவேளையில், ரஷ்யாவிடம் இருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த அளவில் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த நடவடிக்கையின் தாக்கத்திலிருந்து விலக்கு பெறும் வாய்ப்பு உள்ளது.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை சுங்கவரி விதிக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அந்த யோசனை மாற்றப்பட்டு, 100 சதவீத வரி விதிக்கும் வகையில் மசோதா திருத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாகவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையிலும், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?
உலகம்
18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!
உலகம்
’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!
உலகம்
முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!
உலகம்
ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!
உலகம்