Skip to content

காங்கிரஸிடம் பெரிய தோல்வி.. கூண்டோடு கலைக்கப்பட்ட பாஜக.. அதிரடி நடவடிக்கை எடுத்த தலைமை!

இதனைடுத்து முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் போபாலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தோல்விக்கான காரணங்களை ஆராய இரு நபர் குழு அமைக்கப்பட்டது. மத்தியப்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இதனைடுத்து முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் போபாலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தோல்விக்கான காரணங்களை ஆராய இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் ததியா (Datia) சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாவட்ட பாஜக அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸும் குஜராத்தில் பாஜகவும் வெற்றிபெற்ற நிலையில், பீகாரில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ததியா மாவட்ட அமைப்பைக் கலைத்து பாஜக மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது. ததியா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கன்சியாம் சிங்கிடம், பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரி 6,016 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Mohan Yadav

பாஜகவின் பலமான கோட்டையாகக் கருதப்பட்ட இத்தொகுதியில் கிடைத்த தோல்வி கட்சித் தலைமைக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது. இதனைடுத்து முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் போபாலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தோல்விக்கான காரணங்களை ஆராய இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் விசாரணையில், முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ராவுக்கு சீட் மறுக்கப்பட்டு, அசுதோஷ் திவாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதாகவும், தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக உள்ளூர் நிர்வாகிகள் சிலர் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே, ததியா மாவட்டத் தலைவர் மற்றும் அனைத்துக் குழுக்களும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP

கட்சியின் மாநில அலுவலகச் செயலாளர் ஷியாம் மகாஜன் வெளியிட்ட உத்தரவின்படி, ததியா மாவட்ட பாஜக தலைவர் ரகுவீர் சிங் குஷ்வா உட்பட மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, மண்டலக் குழுக்கள், அணிகள் மற்றும் அனைத்துத் துணை அமைப்புகளும் உடனடியாகப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு அமைப்புக் கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைப்பு கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நிர்வாகிகளை நியமிக்க மாநிலத் தலைமை முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா