Skip to content

இப்போ இந்திய ரூபாய் தான் King! டாலர், யூரோ-வை ஓரங்கட்டி அதிரடி!

இந்திய ருபாய் நோட்டுகள் பற்றி வெளியாகும் செய்திகள் எப்போதுமே பரபரப்பான பேசுபொருளாகிவிடுகின்றன. இந்நிலையில் தற்போது ரூபாய் நோட்டுக்கள் பற்றி வந்துள்ள செய்தி அந்த வரிசையில்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இந்திய ருபாய் நோட்டுகள் பற்றி வெளியாகும் செய்திகள் எப்போதுமே பரபரப்பான பேசுபொருளாகிவிடுகின்றன. இந்நிலையில் தற்போது ரூபாய் நோட்டுக்கள் பற்றி வந்துள்ள செய்தி அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

Summary

இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்க எண்ணிக்கையில் அமெரிக்க டாலர், யூரோவை முந்தி உலக கவனத்தை ஈர்த்துள்ளன. RBI துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மு கூறியதன்படி, இந்தியாவில் 176 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன; அமெரிக்காவில் 56 பில்லியன் டாலர், ஐரோப்பாவில் 30 பில்லியன் யூரோ மட்டுமே. குறைந்த மதிப்பிலான நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுவது இதற்குக் காரணமாக விளக்கப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கையில் இந்திய ரூபாய், அமெரிக்க டாலர் மற்றும் யூரோவை முந்தியுள்ளது. RBI அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மு, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற Global Cash Management 2026 மாநாட்டில் பேசும்போது, இந்தியாவில் சுமார் 176 பில்லியன் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு மாறாக, அமெரிக்காவில் சுமார் 56 பில்லியன் டாலர் நோட்டுகளும், ஐரோப்பாவில் சுமார் 30 பில்லியன் யூரோ நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. அதாவது, எண்ணிக்கையில் இந்திய ரூபாய் நோட்டுகள் அமெரிக்க டாலர் நோட்டுகளைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதற்கு இந்தியாவில் குறைந்த மதிப்பிலான நோட்டுகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் ஒரு முக்கிய காரணம் என முர்மு விளக்கினார்.

American Doller

American Doller

இந்தியாவில் பல்வேறு மதிப்புகளில் 176 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் ரூ.500 நோட்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ரூ.100 நோட்டுகளும் கணிசமான அளவில் உள்ளன. அதேவேளையில், ரூ.2,000 நோட்டுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புழக்கத்தில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 28 முதல் 30 பில்லியன் நோட்டுகள் அச்சிடப்பட்டு, பழைய நோட்டுகளில் சுமார் 21 பில்லியன் திரும்பப் பெறப்படுவதாக முர்மு கூறினார்.

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்தாலும், பணத்தின் பயன்பாடு குறையவில்லை. இதை ‘Cash Paradox’ என RBI குறிப்பிடுகிறது. 2026 ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ.42.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Euro

EuroReuters

மூத்த குடிமக்கள், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள், மோசடி அச்சம் மற்றும் தேர்தல் கால பணத் தேவை உள்ளிட்ட காரணங்களால் ரொக்கப் பயன்பாடு தொடர்ந்து அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், எதிர்கால பணத்தேவையை கணிப்பதும், நோட்டுகள் அச்சிடுதல் மற்றும் விநியோகத்தை திட்டமிடுவதும் RBI-க்கு சவாலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா