இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பலாம்.. இலங்கை அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கை தமிழர் அகதிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும், தாராளமாக அவர்கள் தாயகம் திரும்பலாம் என இலங்கை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கை தமிழர் அகதிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும், தாராளமாக அவர்கள் தாயகம் திரும்பலாம் என இலங்கை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிமல் ரத்நாயக்க
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இருந்து வந்த இலங்கை அகதிகள் சிலர், பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அரசு தலையிட்டதால் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினா ர். இனி இலங்கைவாசிகள் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தின் வழியேயும் அச்சமின்றி தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு திரும்பும் அகதிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!
தமிழ்நாடு
விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
தமிழ்நாடு
”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!
தமிழ்நாடு
கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தமிழ்நாடு
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?
தமிழ்நாடு