Skip to content

சிங்கப்பூரில் குழந்தை பெற்றால் RS.46.5 லட்சம்.. அதே பாணியை பின்பற்றும் ஆந்திரா.! புதிய திட்டம்!

ஆந்திர அரசு மக்கள்தொகைக் கொள்கையை மாற்றி 2, 3 குழந்தைகளை ஊக்குவித்து அதற்கு சலுகைகளும் வழங்குகிறது.. Summary இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

ஆந்திர அரசு மக்கள்தொகைக் கொள்கையை மாற்றி 2, 3 குழந்தைகளை ஊக்குவித்து அதற்கு சலுகைகளும் வழங்குகிறது..

Summary

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம் 1.5 ஆகக் குறைந்து முதியோர் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், ஆந்திர அரசு மக்கள்தொகைக் கொள்கையை மாற்றி 2, 3 குழந்தைகளை ஊக்குவிக்கிறது. 2ஆவது, 3ஆவது குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க ஊக்கம், 18 வயது வரை இலவசக் கல்வி, மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது; தெலங்கானாவும் இதை ஆய்வு செய்கிறது.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி எட்டு ஏழு என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அங்கு குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க புதிய குடும்ப ஆதரவுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை கல்வி, சுகாதாரம் மற்றும் ரொக்கப் பரிசுகள் என மொத்தம் சுமார் இந்திய மதிப்பில் ரூ. 46 புள்ளி 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இந்திய குடும்பம்

உலகளவில் பிறப்பு விகிதம் சரிந்துவரும் சூழலில், பிற நாடுகளும் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தென்கொரியா, குழந்தைப் பேறுகளுக்கு நேரடியாக ரொக்கப் பரிசுகளையும், ஜப்பான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் தம்பதிகளுக்கு வட்டி இல்லாக் கடன்கள், வரி விலக்குகள் மற்றும் இலவசக் குழந்தைகள் பராமரிப்பு மையங்களையும் வழங்கி வருகின்றன.

இந்திய குடும்பம்

இந்தியாவிலும் இந்த மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு விகிதம் 1 புள்ளி 5 என்ற அளவுக்குக் குறைந்து, முதியோர் மக்கள்தொகை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஆந்திர அரசு தனது மக்கள்தொகைக் கொள்கையை மாற்றி, 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றெடுப்பதை ஊக்குவிக்கிறது. 2ஆவது மற்றும் 3ஆவது குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க ஊக்கம், 18 வயது வரை இலவசக் கல்வி மற்றும் மாதம் ரூ. 1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை போன்ற சலுகைகளை முன்மொழிந்துள்ளது. தெலங்கானாவிலும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தம்பதிகளுக்குச் சலுகைகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா