சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை தனித் தீர்மானம்.. முன்மொழியும் முதல்வர் விஜய்!
இன்று சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிய உள்ளார். Summary தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில், முதலமைச்சர்

இன்று சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிய உள்ளார்.
Summary
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை குறித்த தனித் தீர்மானத்தை முன்வைக்கிறார். மக்களவை தொகுதி எண்ணிக்கையை 543 ஆகவே தொடர வேண்டும் என்றும், தற்போதைய 543 தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முடிவை சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், அரசு நிகழ்வுகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை கண்டிப்பாக முதலில் பாட வேண்டும் மற்றும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் முதலிய முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அந்தவகையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார். மக்களவை தொகுதி எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என்றும் தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசித்திருந்த நிலையில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!
தமிழ்நாடு
விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
தமிழ்நாடு
”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!
தமிழ்நாடு
கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தமிழ்நாடு
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?
தமிழ்நாடு