Skip to content

அயோத்தி கோயில் நிதி முறைகேடு | 6 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த தணிக்கை நிறுவனம்!

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ரொக்கமாக மட்டுமே சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமான காணிக்கை கிடைத்துள்ளதாகம திப்பிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ரொக்கமாக மட்டுமே சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமான காணிக்கை கிடைத்துள்ளதாகம திப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகளின் கணக்கு வழக்குகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக 6 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனியார் தணிக்கை நிறுவனம் எச்சரித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ரொக்கமாக மட்டுமே சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமான காணிக்கை கிடைத்துள்ளதாகம திப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தங்கம்,மற்றும் வைர நகைகளும் வெள்ளிப் பொருட்களும் பெருமளவில் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன. தற்போது, இந்தக் காணிக்கைப் பணம் மற்றும் நகைகள் முறையாகக் கணக்கில் காட்டப்படாமல் அறக்கட்டளை மற்றும் கோயில் ஊழியர்களால் களவாடப்பட்டுளதாக எழுந்துள்ள முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்

இந்நிலையில், அறக்கட்டளை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 2020 நவம்பரில் ஒரு தனியார் தணிக்கை நிறுவனம் இதன் நிதி நிர்வாகம் குறித்து எச்சரித்திருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அறக்கட்டளையின் நிர்வாக முறை மிகவும் தொழில் முறை அற்றதாக இருப்பதாகவும், வரவு-செலவுகளைக் கண்காணிக்க முறையான நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றும் தணிக்கை நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த எச்சரிக்கையை அறக்கட்டளை நிர்வாகம் அலட்சியப்படுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித நெறிமுறைகளையும் அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா