Skip to content

அமெரிக்கா தாக்குதல்.. காமேனி கொல்லப்பட்ட வளாகம்.. அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அமெரிக்கத் தாக்குதல்களால் சேதமடைந்த காமேனி கொல்லப்பட்ட வளாகத்தின் அரிதான காட்சிகளை ஈரான் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. Summary ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய முதல்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

அமெரிக்கத் தாக்குதல்களால் சேதமடைந்த காமேனி கொல்லப்பட்ட வளாகத்தின் அரிதான காட்சிகளை ஈரான் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

Summary

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய முதல் நாளில் உச்ச தலைவர் அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். தெஹ்ரான் கிராண்ட் மொசல்லாவில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மஷ்ஹத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதேநாளில், அவரது தெஹ்ரான் இல்ல வளாகத்தில் ஏற்பட்ட கடுமையான சேதத்தை காட்டும் 35 வினாடி காணொளியை அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் முதல் நாளான பிப்ரவரி 28 அன்று காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது 14 மாதப் பேத்தி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அலி கமேனியின் உடல் அடங்கிய சவப்பெட்டி தெஹ்ரான் கிராண்ட் மொசல்லாவில் (Tehran Grand Mosalla) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது; பின்னர் அது தெஹ்ரான் மற்றும் கோம் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, இன்று ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Ali Khamenei’s funeral

இதற்கிடையே, இறுதிச்சடங்கு நிகழ்வின்போது அதில் பங்கேற்றிருக்கும் ஈரான் தலைவர்களை ஒரே அடியில் அழிக்க முடியும் என ட்ரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையில் ஒரேநாளில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் பதிலடி கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் மேற்கொண்ட குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிட்டது என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், இன்று நடைபெற்ற காமேனியின் இறுதிச் சடங்குகளுக்கு மத்தியில், ஈரானின் அரசு ஊடகம் முதன்முறையாக, அலி காமேனியின் வீட்டு வளாகத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைக் காட்டும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதாவது, அவர் கொல்லப்பட்ட நாளின் ஏற்பட்ட சேதத்தை வெளியிட்டுள்ளது. 35 வினாடிகள் ஓடக்கூடிய இந்தக் காணொளி, காமேனியின் தெஹ்ரான் வீட்டு வளாகத்திற்குள் அமைந்துள்ள ‘இமாம் கொமேனி ஹுசைனியா’ (வழிபாட்டுக்கூடம்) பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதங்களையும் சிதைவுகளையும் காட்டுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் முதல்நாளில் ஏற்பட்ட அழிவின் தீவிரத்தை இந்தக் காணொளி வெளிப்படுத்துகிறது; காமேனி உச்சத்தலைவராக இருந்தபோது பொதுமக்களிடையே உரையாற்றுவதற்கான முக்கிய இடமாக இந்தக் கட்டடம் திகழ்ந்து வந்ததாக அச்செய்தி கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?

உலகம்

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

உலகம்

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

உலகம்

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

உலகம்

ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!

உலகம்

4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை.. ட்ரெண்டிங்கில் ஜப்பான் விஞ்ஞானியின் வொர்க்அவுட்! நன்மை என்ன?

உலகம்