Skip to content

5,105 செயற்கைக்கோள்கள்.. Space X-க்கு போட்டியாகக் களமிறங்கும் அமேசான்!

குளோபல் ஸ்டார் சேவைகளைக் கைப்பற்றி, LEO செயற்கைக்கோள் வலையமைப்புடன் இணைத்து தொலைதூர பகுதிகளுக்கும் இணையச் சேவையை கொண்டுசெல்ல அமேசான் திட்டமிடுகிறது. உலகம் முழுவதும் மொபைல்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

குளோபல் ஸ்டார் சேவைகளைக் கைப்பற்றி, LEO செயற்கைக்கோள் வலையமைப்புடன் இணைத்து தொலைதூர பகுதிகளுக்கும் இணையச் சேவையை கொண்டுசெல்ல அமேசான் திட்டமிடுகிறது.

உலகம் முழுவதும் மொபைல் இணைப்பை வழங்கும் நோக்கில், 5,105 செயற்கைக்கோள்களைக் கொண்ட புதிய வலையமைப்பை இயக்க அமேசான் நிறுவனம் அமெரிக்க கூட்டாட்சித் தொலைத்தொடர்பு ஆணையத்திடம் (FCC) அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

Amazon

இந்தத் திட்டத்தின்கீழ், 2028 முதல் புதிய செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. சமீபத்தில், ஆப்பிள் ஐபோன்களுக்கு அவசரகால செயற்கைக்கோள் சேவையை வழங்கும் குளோபல் ஸ்டார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் சேவைகளை அமேசான் வாங்கியுள்ளது. அதன் ரேடியோ அலைவரிசையையும் பயன்படுத்தி, தனது லியோ (LEO) இணையச் செயற்கைக்கோள் வலையமைப்புடன் இந்தச் சேவையை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம், செயற்கைக்கோள் இணையச் சேவையில் முன்னிலை வகிக்கும் எலான் மஸ்க்கின் Space Xக்கு அமேசான் நேரடிப் போட்டியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்குத் தேவையான ராக்கெட்டுகள் அமேசானிடம் இல்லை. மேலும், ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டுகளை நம்பியிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் தாமதமாகியுள்ளது.

Space x

இருப்பினும், உலகின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் இணையச் சேவையைக் கொண்டுசெல்லும் இலக்குடன் அமேசான் முன்னேறி வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 400 செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே பூமியைச் சுற்றி இயங்கி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?

உலகம்

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

உலகம்

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

உலகம்

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

உலகம்

ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!

உலகம்

4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை.. ட்ரெண்டிங்கில் ஜப்பான் விஞ்ஞானியின் வொர்க்அவுட்! நன்மை என்ன?

உலகம்