Skip to content

30 நொடிகள் குலுங்கிய நிலம்.. இயற்கை காட்டிய கோபம்.. சிதறி ஓடிய பொதுமக்கள்!!

மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு போல பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுந்ததால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். நாம் இயற்கைக்கு செய்ததை தான் அது

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு போல பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுந்ததால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

நாம் இயற்கைக்கு செய்ததை தான் அது நமக்கு செய்யும், இயற்கை அன்னை கோபம் மிகுந்தவள், இயற்கை கோரத் தாண்டவத்தின் முன் மனிதன் ஒரு சிறிய மழைதுளி போல் என்று பல்வேறு தத்துவங்கள், மனிதனின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தப்படுகிறது.

இது தத்துவங்கள் அனைத்தும் 2026-ஆம் ஆண்டில் மனித இனத்திற்கு தேவை மிகுந்ததாகவே மாறிவிட்டது. நிலநடுக்கம், புயல், வெள்ளம், அதி பயங்கர கனமழை, சுனாமி எச்சரிக்கை போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு, எங்கு திரும்பினாலும் மக்களின் ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

el nino reuters

இதுமட்டுமின்றி, எல்.நினோ மாதிரியான பருவகால பிரச்சனைகளும் வறட்சியை ஏற்படுத்தி, உலகையே புரட்டி போட்டுள்ளது. இப்படியான சூழலில், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில், நள்ளிரவு 1 மணி அளவில், அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பரினகொச்சேஸ் ( parinacochas ) மாகாணத்தில் உள்ள உபஹசோ ( Upahuacho ) நகரில் இருந்து 38 கி.மீ தூரத்திலும், 66 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

earthquake

இந்த பகுதி மட்டுமின்றி, அந்நாட்டின் ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர்? மீட்பு பணிகளின் நிலவரம் என்ன? போன்ற விவரங்கள், இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பு, கடந்த 2007-ஆம் ஆண்டு, 7.9 என்ற ரிக்டர் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்காவை சுற்றி என்ன நடக்கிறது?

உலகம்

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

உலகம்

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

உலகம்

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

உலகம்

ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை.. அமெரிக்காவுக்கு பதிலடி.. ரத்தக்களறியாகும் மத்திய கிழக்கு!

உலகம்

4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை.. ட்ரெண்டிங்கில் ஜப்பான் விஞ்ஞானியின் வொர்க்அவுட்! நன்மை என்ன?

உலகம்