Skip to content

100% தூய்மை விளம்பரம் சர்ச்சை.. Dabur உணவுப் பொருட்களுக்கு அதிரடி தடை விதித்த FSSAI!

‘100% Natural’ முதல் ‘100% Organic’ வரை போன்ற விளம்பரங்கள் காரணமாக டாபர் தயாரிப்புகளுக்கு FSSAI தடை விதித்துள்ளது. நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடிய ‘100%’

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

‘100% Natural’ முதல் ‘100% Organic’ வரை போன்ற விளம்பரங்கள் காரணமாக டாபர் தயாரிப்புகளுக்கு FSSAI தடை விதித்துள்ளது.

நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடிய ‘100%’ என்ற விளம்பரக் கூற்றுகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, டாபர் இந்தியா நிறுவனத்தின் சில உணவுப் பொருட்களின் விற்பனையை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை செய்துள்ளது.

Dabur

டாபர் நிறுவனத்தின் தேன், ஆப்பிள் சிடர் வினிகர், விர்ஜின் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், பசும்பால் நெய், இளநீர் மற்றும் தேங்காய்ப் பால் உள்ளிட்ட பொருட்களில் ‘100% Natural’, ‘100% Pure’, ‘100% Purity Guaranteed’, ‘100% Organic’ போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக FSSAI தெரிவித்துள்ளது. இத்தகைய கூற்றுகள் தெளிவற்றவை, நிரூபிக்க முடியாதவை மற்றும் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடியவை என கூறியுள்ளது.

மேலும், சில பொருட்களில் உரிய சான்றிதழ் இல்லாமல் ‘Jaivik Bharat’ லோகோ பயன்படுத்தப்பட்டதாகவும் விதிமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கடந்த 2025 மே மாதமே உணவுப் பொருட்களின் லேபிள்களில் ‘100%’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு FSSAI அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு டாபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டாபர், FSSAI-யின் உத்தரவைப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிப்பு லேபிள்களை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா