
ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சயமானவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருப்பதை தற்போது அறிவித்துள்ளார்.
Summary
ஓமர் லூ இயக்கி 2016இல் வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தாலும் மது சி நாராயணன் இயக்கி 2019இல் வெளியான ‘கும்பலங்கி நைட்ஸ் ‘ படத்தில் ஃபகத் பாசில் மனைவியாக சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

தொடர்ந்து `Sajan Bakery Since 1962′, `Kanakam Kaamini Kalaham’, `Rorschach’, `Appan’, `Nunakuzhi’ என பல படங்களில் இவரது கதாபாத்திரம் பாராட்டுகளை பெற்றது. சமீபத்தில் ராம் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘பறந்து போ’ படத்தில் நடித்து பரவலான கவனத்தை பெற்றார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 9) கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனை, அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். கிரேஸும் இசையமைப்பாளர் அபி டாம் சிரியாவும் காதலித்து வந்துள்ளனர். 9 ஆண்டு காதல், நேற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.