அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் ஐசியூவில் சிகிச்சை பெறுகிறார். அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் பார்க்க முடியவில்லை, உடல் நலம் மேம்படுகிறது என தெரிவித்தார்.
வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனை சென்று மருத்துவ பரிசோதனைகளை ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதயம் சார்ந்த பிரச்சனைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ராமதாஸூக்கு கார்டியோ ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தந்தை, மகன் என பாமக இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அவரைப் பார்க்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமதாஸ் நல்ல குணமுடன் இருப்பதாகவும், இரண்டு நாள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரைப் பார்க்க முடியவில்லை என்றும், மருத்துவர்களிடம் அவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் அன்புமணி தெரிவித்தார்.