அஸாமில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் போதைப்பொருள்கள் சார்ந்த வழக்குகளில் 26,500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
அசாமில் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்க 2021 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.3253 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் 26,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
அஸாம் மாநிலத்தில் இதுவரை 3 ஆயிரத்து 253 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல்
இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் 26 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மியான்மரில் இருந்து அசாமுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதால் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
