மத்திய பிரதேசத்தில் கனமழையால் சித்ரகூடத்தின் மந்தாகினி (Mandakini River) ஆற்றில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
Summary
மத்தியப் பிரதேசம்-உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள சித்ரகூட் ஆன்மீகத் தலமும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் 20 ஆண்டுகளில் இல்லாதளவு கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள பிரபல ஆன்மீகத் தலமான சித்ரகூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்த தால் மந்தாகினி நதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராம்காட் மற்றும் பாரத் காட் பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. முக்கிய பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மந்தாகினி ஆற்றில் பெருவெள்ளம்
20 ஆண்டுகள் இல்லாதளவு வெள்ளப்பெருக்கால் மீட்பு பணிகளுக்காக சென்ற ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலை காரணமாக தளத்துக்கு திரும்பின. பேரிடர் மீட்புக்குழுவினரும் உள்ளூர் நிர்வாகத்தினரும் இணைந்து படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
