ஜார்க்கண்ட்டில் மாணவர்களின் 26 நாட்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தேர்வுகளை ரத்து செய்துள்ளார் முதல்வர் ஹேமந்த் சோரன்.
Summary
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து 26 நாட்கள் தொடர்ந்து போராடிய மாணவர்கள், அவர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 22 போட்டித் தேர்வுகளை ரத்து செய்து, நீதிபதி தலைமையிலான விசாரணை, விரைவு நீதிமன்றம் மற்றும் அமலாக்கத் துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, கடந்த 26 நாட்களாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 22 போட்டித் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

jharkhand students protest
மேலும், நீதிபதி தலைமையிலான விசாரணை, விரைவு நீதிமன்ற நடவடிக்கை மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அதிரடி முடிவையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டனர்.
