இந்தியா 80ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்நேரத்தில் 1947இலும் தற்போதும் நாட்டின் பல்வேறு சமூக, பொருளாதார காரணிகள் குறித்த ஒப்பீட்டை பார்ப்போம்..
இந்தியாவின் மக்கள் தொகை 34 கோடியில் இருந்து 146 கோடியாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு 12 சதவீதத்தில் இருந்து 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. சராசரி ஆயுட்காலம் அப்போது 32 ஆக மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 72 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகள் இறப்பு வீதம் சுதந்திரத்தின்போது 1,146 ஆக இருந்து தற்போது 1,042 ஆக சரிந்துள்ளது.

Independence Day
4 லட்சம் கிலோ மீட்டர் ஆக இருந்த சாலைகளின் நீளம் தற்போது 66 லட்சம் கிலோ மீட்டர் ஆக அதிகரித்துள்ளது. ரயில் பாதைகள் நீளம் 53 ஆயிரம் கிலோ மீட்டர்களில் இருந்து 70 ஆயிரம் கிலோ மீட்டர்களாக அதிகரித்துள்ளது. மின்னுற்பத்தி திறன் 1,362 மெகாவாட்டாக இருந்த நிலையில், அது இப்போது 5 லட்சத்து 43 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய் 30 காசாக இருந்த நிலையில் அது தற்போது 95 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பு 22 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 80 ஆண்டுகளுக்கு பிறகு அது 3 ஆயிரத்து 920 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 1947இல் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 25 காசாக மட்டுமே இருந்த நிலையில், இப்போது அது சுமார் 105 ரூபாயாக இருக்கிறது. தங்கம் ஒரு கிராம் 9 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது சுமார் 14 ஆயிரத்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
