ஏர் இந்தியா விமானி கஞ்சா பயன்படுத்தியது சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Summary
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் ஆகஸ்ட் 4 அன்று கடுமையாக குலுங்கி, பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் குலுங்கிய சம்பவத்தில், விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.

ஏர் இந்தியா
இந்நிலையில் விமானிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.
