ஹரியானாவில் 4 மாதங்களுக்கு கொள்ளையடிக்கப்பட்ட அதே வீட்டில் 2ஆவது முறையாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
ஹரியானா குருஷேத்திரத்தில் மூத்த வழக்கறிஞர் பல்வந்த் சிங் வீட்டில் நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக பெரிய கொள்ளை நடந்தது. மார்ச் 20 அன்று 50 லட்சம் ரூபாய் திருடப்பட்ட நிலையில், மீண்டும் புகுந்த கும்பல் 2 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.15 கோடி மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றது. போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
ஹரியானாவில் 4 மாதங்களுக்கு முன்பு திருடிய வீட்டிலேயே மீண்டும் கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவின் குருஷேத்திரத்தில் மூத்த வழக்கறிஞர் பல்வந்த் சிங்என்பவரின் வீட்டில் கடந்த மார்ச் மாதம்20ஆம் தேதி புகுந்த கொள்ளையர்கள் 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளை
இந்த நிலையில் மீண்டும்அவருடைய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 2 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 17 முதல் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 முதல் 2 கிலோ தங்க நகைகள், சுமார் 4 கிலோ வெள்ளி நகைகள், பாத்திரங்கள் மற்றும் சிலைகள், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் சுமார் 3.15 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
