அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில், ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று அறிவித்தார். அதிலும் குறிப்பாக, தவெக அரசு பெண்களை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த திட்ட ஒதுக்கீடுகளைப் பார்ப்போம்..
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு; அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
- அண்ணன் சீராக, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு
- மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவுத் திறன் ஊக்குவிக்கப்படும்
- அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில், ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறுவர்.
- அனைவருக்கும் சம வாய்ப்பு தரும் நோக்கில், ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத் தொகை வழங்கப்படும்.
- மதச்சார்பற்ற சமூக நீதி அரசு வாயிலாக கிறிஸ்தவ & முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுதும் அமைக்கப்படும்.
- வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்; கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் & மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்.
- கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்குக் கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்; பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.
- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்திற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு

- சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டத்திற்கு, நடப்பாண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு; மகளிர் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் புதிய திட்டம்; தொழில் முனைவோரின் செயல் திறனை வெளிப்படுத்தும் சுய உதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்.
- அனைவருக்கும் தரமான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு
- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் ‘வெற்றி 150’திட்டம் அறிமுகம்; 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலை; மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி
